அய்யப்பன் கோவிலில் பகவதி அம்மனுக்கு பூஜை
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிபுரம் அய்யப்பன் கோவிலில், கடந்த 17ம் தேதி முதல், அடுத்த மாதம் 17ம் தேதி வரை, நாள் தோறும் இரவு 7:00 மணி முதல், 8:00 மணிவரை பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இந்த பூஜையில், பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க 400 ரூபாய் செலுத்த வேண்டும்.
அடுத்த மாதம் 14ம் தேதியன்று, மாளிகைபுறத்தம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. பொங்கல் வைக்க விரும்பும் பக்தர்கள் ஆலய அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என, அய்யப்பன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்
Advertisement
Advertisement