ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் வன மகா உற்சவம்

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியில் மரம் நடுவதற்கான வன மகா உற்சவம் நடந்தது.

தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் சாந்தி பூபதி, பள்ளி இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி குத்துவிளக்கேற்றினர். மெட்ரிக்பள்ளி முதல்வர் ரத்னா கணபதி வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், காடுகளின் அவசியம், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றி, மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார்.

செஞ்சி வனச்சரகர் பழனிவேல் மற்றும் வனவர், வன பாதுகாவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement