ம.பி., கோட்டையில் 400 ஆண்டு பழமையான பீரங்கி திருட்டு: தேடும் பணி ராஜஸ்தானில் தீவிரம்
நமது நிருபர்
மத்தியப் பிரதேசத்தின் நர்வார் கோட்டையில் இருந்த 400 ஆண்டு பழமையான பீரங்கி, சர்வதேச கடத்தல் கும்பலால் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டது. பீரங்கியை கொள்ளை கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ராஜஸ்தானில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகும். கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10ம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோட்டையில், 14 வரலாற்று சிறப்புமிக்க பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டவை. ஒவ்வொரு பீரங்கியும் 3. 5 டன் எடை கொண்டவை.
பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவற்றின் முக்கியத்துவம் கருதி கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தக் காவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன் கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது. கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், துப்பாக்கியை காட்டி பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த வாகனம் ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரௌலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு மாபெரும் தேடுதல் வேட்டையைத் துவங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தொடர்ச்சியாகத் தேடுதல் வேட்டை நடக்கிறது. பரத்பூரிலிருந்து ஒரு உலோகக் கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகளைக் கொண்டு நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. தேடுதல் குழுக்கள் ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி பல இடங்களில் மண்ணைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிணற்றை காணோம் - அது கற்பனை. இது நிஜம். கோட்டையில் இருந்து அந்த அளவுக்கு பாரம் உள்ள ஒரு பீரங்கியை எப்படி திருடியிருப்பார்கள்?
அயோத்தி ராமர் கோவிலில் ராமரோட பாதுகையை கூட திருடப்பட்டுள்ளது.
என்ன இருந்தாலும் நம்ம தலீவர் மாதிரி முன்னோடிய யாராலும் பார்க்க முடியாது. சர்க்கரையை கரப்பான்பூச்சி தின்றுவிட்டது கோணியை சாக்குப்பை கரையான் அரித்துவிட்டது என்று போட்டாரே ஒரு போடு.
ஒவ்வொரு பீரங்கியும் 3. 5 டன் எடை கொண்டவை. காவலர்களின் பாதுகாப்பையும் மீறி திருடப்பட்டுள்ளது. சவுக்கிதார் சோர் ஹை.
ராமர் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றதை போல.
அநேகமாக திருடர்கள் benarasil இருந்து வந்து இருப்பார்கள்
நிச்சயம் வாய்ப்புள்ளது.
நல்லா செக் பண்ணுங்க எஜமான், மத்திய பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் செட்டில் ஆன கட்டுமர திருட்டு திமுகவினர் இந்த திருட்டை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஏன்னா, திருடும்போது எந்த தடயமும் இல்லாமல் திருடுவதில் அவர்கள் வல்லவர்கள். அதனால் அவர்கள் மீது சந்தேகம் வருகிறது.
ஜோக்கடிக்கிற விசயம் அல்ல இது...3.5 டன் எடையுள்ளதை திருடி கொண்டுபோகும் நிலையில் பாதுகாப்பு உள்ளது....
ஹாஜா அவர்களே திருட்டு திமுகவிற்கு தங்கள் கொடுக்கும் முட்டு புதுவகை முட்டா இருக்கு.
பெருமை வாய்ந்த பராமரிக்கிற லட்சணத்தை பாரு. இதுக்கு ஃபாரின்காரன் மியூசியத்தில் பீரங்கி நல்லாவே இருக்கும்
என்னங்க பண்றது பீர்பால், இந்தியாவில் இருக்கும் திருடனுங்க எல்லோரும் ஐம்பது வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வந்து கட்டுமர பட்டறையில் ட்ரைனிங் எடுத்திருப்பானுங்க போல, அதனால் எந்த தடயமும் இல்லாமல் எங்குமே மாட்டிக்கொள்ளாமல் திருடுறானுங்க.
கிணத்தக் காணோம் வடிவேலுவே தேவலை.
மிரட்டி லாரியில் ஏற்றி சென்றார்களாம். உடனடியாக ஏன் பின் தொடரவில்லை? அவர்கள் மீது நடவடிக்கை என்ன?
ஒரு சிறப்பு விசாரணை குழு எஸ்ஐடி அமைத்து தாலாட்டு பாடி தூங்க வைத்து விடுவார்கள்.மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்