நெருங்கும் ஆடிப்பெருக்கு பாறைகளான காவிரி ஆறு
குமாரபாளையம்:ஆடிப்பெருக்கு நெருங்கும் நிலையில், குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.
மேட்டூர்
அணை நீர்மட்டம், 120 அடியாக இருக்க வேண்டிய நிலையில், தற்போது, 75 அடி
மட்டுமே உள்ளது. ஆடிப்பெருக்கில், காவிரி ஆற்றின் இரு கரையை
தொட்டவாறு கரை புரண்டு ஓட வேண்டிய காவிரி ஆறு, தற்போது
நீர்வரத்தின்றி காணும் இடமெல்லாம் வெறும் பாறைகளாக
காட்சியளிக்கின்றன. தேனி பகுதியில் உள்ள அணை நீர்மட்டம் மிக
குறைவாக உள்ளதால், நாள் ஒன்றுக்கு வீட்டுக்கு மூன்று குடங்கள்
குடிநீர் தான் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தி, தற்போது, மேட்டூர்
அணை மூலம் குடிநீர் வசதி பெறும் பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு நிலையில் மழை அதிகம் பெய்தால் தான்,
மேட்டூருக்கு தண்ணீர் வரும் வாய்ப்பு உருவாகும். இதனால் ஆங்காங்கே மழை
வேண்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்,
மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்படும் என, கர்நாடக முதல்வர்
கூறி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தமிழக முதல்வர், மேகதாது பகுதியில் அணை கட்டும் பணி
நடக்காமல் இருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.