அரசு பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கல்
நாமகிரிப்பேட்டை:தமிழக
அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் கல்வி
மற்றும் கலை, விளையாட்டு போன்ற தனித்திறமைகளை ஊக்குவிக்கும்
வகையில், ஆண்டு
தோறும் காமராஜர் விருது வழங்கி
கவுரவிக்கப்படுகிறது.
இந்த விருதிற்கு மாவட்டத்தில் கல்வி
மற்றும் தனித்திறமைகளில் சிறப்பாக செயல்படும், பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 மாணவர்கள் தலா, 10, பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி,
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம் அரசு
மேல்நிலைப்பள்ளியில், 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள்,
காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பத்தாம் வகுப்பில்
பயின்ற தீபிகா, கனிஷ்காஸ்ரீ ஆகிய இரு மாணவியரும், பிளஸ் 2வில் பயின்ற
சவுந்தரராஜன், கோபிகா ஆகிய, இரு மாணவர்களும் இவ்விருதுக்கு
தேர்வாகினர்.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன்
விருதுக்கு தேர்வான மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ், ரொக்க
பரிசுக்கான காசோலைகளை நேரில் வழங்கி பாராட்டினார்.
தலைமை ஆசிரியர்
ஜோதிகண்மணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
காசிவிஸ்வநாதன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும்
முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விருது பெற்ற மாணவ, மாணவியரை
வாழ்த்தினர்.