மத்திய அமைச்சர் ராஜினாமா பட்டாசு வெடித்து உற்சாகம்
நாமக்கல்:'நீட்'
தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தால், மத்திய கல்வித்துறை
அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து,
இந்திய மாணவர் சங்கம், தி.மு.க., மாணவர் அணி சார்பில், நாமக்கல் பூங்கா
சாலையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், மகிழ்ச்சியை பகிர்ந்து
கொண்டனர்.
சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட
தலைவர் நிசார், இணை செயலாளர் பிச்சைமுத்து, செயற்குழு உறுப்பினர் கவின்
உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி போராடி
வந்த மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத, தமிழக முதல்வர் விஜய்
புகைப்படத்தை கையில் ஏந்தி, காணவில்லை என கோஷம் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement