மஹிந்திரா தொழில் பூங்கா சென்னையில் விரிவாக்கம்
புதுடில்லி: சென்னையில் அமைந்துள்ள, 'ஆரிஜின்ஸ் பை மஹிந்திரா' தொழில் பூங்காவை விரிவுபடுத்த, ஜப்பானின் சுமிட்டோமோ கார்ப்பரேஷனுடன் மஹிந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமம் தெரிவித்துள்ளதாவது:
சென்னை பொன்னேரியில் அமைந்துள்ள, 'ஆரிஜின்ஸ் பை மஹிந்திரா' தொழில் மற்றும் தளவாட பூங்காவின், 2பி கட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்திரா மற்றும் டிட்கோ இணைந்து செயல்படுத்தும் மஹிந்திரா வேர்ல்டு சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும், சுமிட்டோமோ கார்ப்பரேஷனும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, 95 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொழில் பூங்காவின் 2பி கட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 'ஆரிஜின்ஸ் பை மஹிந்திரா' திட்டத்தின் மொத்த பரப்பளவு, 540 ஏக்கராக அதிகரிக்கிறது.
இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த 2015-ம் ஆண்டு, முதல் கட்டத்தை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்தன. பின்னர், 2024ல், 2ஏ கட்டமாக விரிவாக்கப்பட்ட நிலையில், தற்போது, 2பி கட்டமும் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்