மேயருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை கோரி கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயருக்கு கொலை மிரட் டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தூண்டுதலாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாளை எம்.எல்.ஏ., அப்துல்வகாப் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளரும், பாளை எம்.எல்.ஏ.,வுமான அப்துல்வகாப் நேற்று போலீஸ் கமிஷனர் தேஷ்முக சேகர் சஞ்சயிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், 'மேயர் ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்து தூண்டுதலாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாநகர தி.மு.க., பொறுப்பாளர் தினேஷ், முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த், மாவட்ட அவைத்தலைவர் முருகன், பகுதி செயலாளர் துபை சாகுல், கவுன்சிலர்கள் உடன் சென்றனர்.

Advertisement