புகையிலை பறிமுதல் கடத்திய முதியவர் கைது
சேலம்:சேலம்,
அன்னதானப்பட்டி போலீசார் நேற்று, நெத்திமேடு, புத்துார் இட்டேரி
சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த, 'ஜெஸ்ட்'
மொபட்டை நிறுத்தி, அதில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து
பார்த்தபோது, 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில், 86 கிலோ அளவில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
விசாரணையில்
கடத்தி வந்தவர், இடைப்பாடி அடுத்த பக்கநாடு, மேட்டுத்தெருவை
சேர்ந்த
அய்யாங்குட்டி, 61, என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து
வாங்கி வந்து, சேலத்தில் அதிக விலைக்கு விற்பதும் தெரிந்தது.
மொபட்டுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அய்யாங்குட்டியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement