மூன்று மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கியது தமிழக அரசு: வட்டி செலவு மட்டும் ரூ.14,618 கோடி

1

சென்னை: தமிழக அரசு, கடந்த மூன்று மாதங்களில் மூலதன திட்டங்களுக்காக, 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்த காலத்தில், நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கு, 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது.

பத்திரம் விற்பனை அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன.

இவற்றில், கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்தான் அதிகம். இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை, அரசு மேற்கொள்கிறது.

நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஆண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் மொத்த கடன், ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

22.82 சதவீதம் இதற்காக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு உள்ளது.

நடப்பு முழு நிதியாண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும், வட்டிக்கு, 76,452 கோடி ரூபாய் செலவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. மொத்த வருவாயில் வட்டி செலவின் பங்கு, 22.82 சதவீதமாக உள்ளது.

@block_B@ 5 ஆண்டுகளில் செலுத்திய வட்டி ஆண்டு ரூபாய் கோடியில் 2021/ 22 41,564 2022/ 23 46,911 2023/ 24 53,566 2024/ 25 59,909 2025/ 26 67,050 * 2026/ 27 76,452 பட்ஜெட் மதிப்பீடுblock_B

Advertisement