டிப்பர் லாரி மோதி தபால் அலுவலர் பலி
பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையத்தை
சேர்ந்த, பாண்டியன் மகன் மனோஜ்குமார், 26. எம்.பி.ஏ., முடித்த நிலையில்,
முத்தம்பட்டி அஞ்சல் நிலையத்தில் கிளை தபால் அலுவலராக
பணிபுரிந்தார்.
கடந்த, 23 இரவு, 7:45 மணிக்கு,
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, சர்வீஸ்
சாலையில், 'யமஹா ரே இசட் ஆர்' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்று
கொண்டிருந்தார். எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் படுகாயம்
அடைந்தார். மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார்.
இதனிடையே
விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓட
முயன்றார். அப்போது அவர், தளவாய்பட்டியை சேர்ந்த வேல்முருகன், 40,
என்பவர் ஓட்டி வந்த டிஸ்கவர் பைக் மீது மோதினார். இதில் வேல்முருகன்
தடுமாறி விழுந்து காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.