சேலத்தில் ஆடித்திருவிழா ஆக., 5ல் விடுமுறை

சேலம்:சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை: சேலம் எட்டுப்பட்டி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் ஆக., 5ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அன்று, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி,
கல்லுாரிகள், ஆக., 8ல் பணி நாளாக செயல்படும்.

Advertisement