பெருமாள் கோவில்களில் சயன ஏகாதசி உற்சவம்
சேலம்:சேலம்,
கோட்டை அழகிரிநாதர் கோவிலில், 'சயன ஏகாதசி' 10 நாள் உற்சவம் கடந்த,
15ல் தொடங்கியது. இந்நிலையில் சயன ஏகாதசி மற்றும் சனிக்கிழமையான
நேற்று காலை, மூலவர் சுந்தரராஜருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி
அலங்காரம், சுந்தரவல்லி தாயாருக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து
ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதரை, சர்வ அலங்காரத்துடன் ஊஞ்சலில்
எழுந்தருள செய்து, 'லாலி' பாடி, சாமரம் வீசி விசேஷ பூஜை
செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்
காவலர்கள், பட்டாச்சாரியார்கள், உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.
அதேபோல்
அம்மாபேட்டை சவுந்தரராஜர், பட்டைக்கோவில் வரதராஜர், 2ம்
அக்ரஹாரம் லட்சுமி நாராயணர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர்
உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில், சுவாமிகளை அலங்கார ஊஞ்சலில்
எழுந்தருள செய்து பூஜை செய்யப்பட்டது.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது