தற்கொலை எச்சரிக்கைக்கு பின் வாலிபர் மாயம்
வாழப்பாடி:வாழப்பாடி,
சக்தி கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார், 30. 'ருத்ரா ஏஜன்சி' வைத்து
தொழில் செய்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து
வீட்டுக்கு செல்லவில்லை.
அவரது தந்தை அண்ணாமலை, நேற்று வாழப்பாடி
போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் மகன் வினோத்குமாரை காணவில்லை.
அவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக
தெரிவித்தார். பின் போனை ஆப் செய்துவிட்டார்' என கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement