அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களின் வாங்கும் முறைகளை முழுதுமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் வீடுகளில் சமைப்பதற்காக வாங்கும் உணவு பொருட்களின் விலை தற்போது, 33 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக செய்தி கள் தெரிவிக்கின்றன.
விலைவாசி உயர்வின் காரணமாக, பொதுமக்கள் தங்களின் பிடித்த உணவுகளை தவிர்ப்பது, விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது போன்ற புதிய பழக்கங்களுக்கு மாறியுள்ளனர்.
பலரும் சூப்பர் மார்க் கெட் செல்வதற்கு முன், செயலிகள் வாயிலாக எங்கு விலை குறைவாக உள்ளது, என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதை ஆராய்ந்த பிறகே பொருட்களை வாங்குகின்றனர்.
விலை உயர்ந்த பிராண்டட் பொருட்களுக்கு பதிலாக, மலிவான பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் மாறி வருகின்றனர்.
மாட்டிறைச்சியின் விலை, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 79 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், பல குடும்பங்கள் இறைச்சி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளன; சில குடும்பங்கள் முற்றிலும் தவிர்த்துவிட்டன.
தொடர் விலைவாசி உயர்வு காரணமாக அமெரிக்க குடும்பங்கள் தங்களுக்கென பிரத்யேகமான சிக்கன திட்டங்களை வகுத்து, செலவுகளை கையாண்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக, பல அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் காபி, பழங்கள், கடல் உணவுகள் போன்ற பல அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட சுங்க வரிகளும் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.
இந்த இந்தியா வில் என்ன விலை குறைந்து விட்டதா? எல்லாமே ஒரே கதை தான்
டிரம்ப் தன் முழு பதிவி காலம் முடியும் வரை பதவியில் இருக்க முடியாது. திமிர் அடங்க வேண்டும். தம் மக்கள் முக்கியம் என்பதைய்ய மறந்து தலைவிரி கோலமாகஅட்டமா போட்டதின் விலைவு டுத்த தேர்தலி ல் அவர் சார்ந்த கட் சி மன்னை கவ்வுவது உறுதி.
டிரம்ப் அண்ணா,
இத்தனை வருஷம் ஆட்சி செய்ஞ்சும் 50 வருட அளவு தான் நம்மால் சாதனை செய்ய முடிந்ததா? என்ன ஒரு அக்கிரமம் .... இன்னும் 20% இறக்குமதி வரி போட்டு இன்னும் 6 மாதத்தில் 100 வருட சாதனை என்று சாதனை செய்வோம்
சட்டாம்பிள்ளை வேலையை நிறுத்தினால் எல்லாம் சரியாகும் . பொருளாதார அடிப்படையே சுரண்டல் சம்மந்தப்பட்டது பின்னர் என்ன எதிர்பார்க்க முடியும் .
இதற்கெல்லாம் காரணம் அந்த புத்திகெட்ட ட்ரம்ப். அங்கு இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி இன்று அங்கு அத்தியாவசிய பொருட்கள் முதல் எல்லா பொருட்களின் விலையும் ஏற்றிவிட்டது அந்த ட்ரம்பின் அராஜகத்தனம். அங்குள்ள மக்கள் இதை எதிர்த்து அமைதி வழியில் போராட்டம் செய்து அந்த புத்திகெட்ட டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து உடனே நீக்கவேண்டும்.
பாவம்யா மாடிவீட்டு ஏழைகள். எல்லாம் வரிவிதிக்கும் அண்ணன் திருவிளையாடல்.
நம்ம மக்களிடம் உள்ள அமெரிக்க ஆசை படிப்படியாக குறையும்
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களின் வாங்கும் முறைகளை முழுதுமாக மாற்றிக்கொண்டுள்ளனர். இதற்கு முழு காரணம் அமெரிக்க அதிபரின் முரட்டுத்தனமான கொள்கைகள்தான்.
எதற்கு எடுத்தாலும் வரி வரி வரி இதை தவிர அவருக்கு வேறொன்றுமே தெரியவில்லை. இரண்டாவது போர் போர் போர் அந்தந்த சிறிய நாடுகள் அவருடைய அடக்கு முறைக்கு அடிபணியவில்லையோ அந்நாட்டின் மீது போர். அங்கிருந்து சூறையாடல் முதலில் உக்ரைன் பிறகு வெனின்சுலா அதன் பிறகு கிரீன்லாந்து அதன் பின்
இப்போது ஈரான் அதன்பின் கியூபா இப்படியே இவருடைய நான்கு ஆண்டுகாலங்களில் உலகத்தையே ஆட்டிப்படைத்துவிட்டுத்தான்செல்வார் உலக நாடுகளுக்கு பாதிப்பு ஓரளவுக்கு இருந்தாலும் அமெரிக்காவிற்கு பாதிப்பு பன் மடங்கு இவர் ஆட்சியை விட்டு விலகினதும் தெரியும்
இங்கேதான் பட்டினத்தார் பொன்மொழி ஞாபகம் வருது, " தன் வினை தன்னை சுடும் ஒட்டப்பன் வீட்டை சுடும்" . டிரம்ப் உலகநாடுகளுக்கு வரி விதிக்க, விதிக்க, அது அமெரிக்க மக்கள் மேல் தான் விழும்.
2019 to 2026 thirty percent too high nna inga India vula nadakkurathu ennanga ?!மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது