மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய 2 பேர் சஸ்பெண்ட்

ஆத்துார்:ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் லாபேஷ். இவர் வீடு கட்ட, தற்காலிக மின் இணைப்பு கேட்டதற்கு, மஞ்சினி மின்வாரிய உதவி பொறியாளர் அய்யாசாமி, 20,000 ரூபாய் கேட்டார். லாபேஷ், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

அவர்கள் அறிவுறுத்தல்படி, கடந்த, 22ல் லாபேஷ், 10,000 ரூபாய் கொடுக்க முயன்றபோது,
அய்யாசாமி, அவருடன் உடந்தையாக இருந்த, ஒயர்மேன் சந்திரன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

இதனால் அந்த இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Advertisement