வள்ளி விலாஸ் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் 

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கான இலவச கண் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடந்தது. புதுச்சேரி ஜோதி ஆரஞ்சு கண் பராமரிப்பு மையம் சார்பில் கண் கிகிச்சை முகாமும், கடலுார் ஜீவா பல் மருத்துவ மையம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, கண் மற்றும் பல் பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  

Advertisement