துாய்மை பணியாளர்நலத்திட்ட முகாம்

மதுரை, ஜூலை 26- மதுரை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள், நலத்திட்ட முகாம்  நடந்தது. துாய்மை பணியாளர் நலவாரியம், தாட்கோ, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன், வருவாய், ஆதார், டிஜிட்டல் சேவைகள், இ.எஸ்.ஐ.,மற்றும் பி.எப்.,துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்பட்டன. மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.    மேயர்(பொறுப்பு) துணை மேயர் நாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கார்த்திகேயன், கோபிசன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், துணை கமிஷனர் ராஜாராம், நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், கவுன்சிலர் முருகன் பங்கேற்றனர்.

Advertisement