ஆச்சார்யா பள்ளியில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் லீக் துவக்கம்
புதுச்சேரி:ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் மூலம் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் லீக் துவங்கப்பட்டுள்ளது.
ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் குழுமம், இசட்.எச்.ஏ., அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மூலம் புதுச்சேரியில் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க இந்தியாவில் முதல் விளையாட்டு அடிப்படையிலான நிலைத்தன்மை லீக் துவக்க நிகழ்ச்சி, புதுச்சேரி ஆச்சார்யா பள்ளியில் நடந்தது.
ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கார்பகா வினாயகா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ராகுபதி கலந்து கொண்டு இந்த லீக்கை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லுாரி, பள்ளி முதல்வர்கள், நிறுவனத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement