தரண் மருத்துவமனையில் ஆப்பரேஷன் பெண்ணுக்கு கிடைத்தது மறுவாழ்வு

சேலம்,:சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த, 48 வயது பெண், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு, மூக்கில் இருந்து ரத்தம் கசியத்தொடங்கியது. அவர் அதே பகுதியில் உள்ள தரண் மருத்துவமனை, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் இன்பரசனை அணுகினார்.
எம்.ஆர்.ஐ., ஸ்கேனில், 'எத்மோயிடல் சைனஸ் கேன்சர்' பாதிப்பு இருப்பது தெரிந்தது. இப்புற்றுநோய் கட்டி மூக்கின் வேர்பகுதி, மூளையின் அடிப்பகுதி எலும்பு, இரு கண்களுக்கு இடைப்பட்ட பகுதி வரை பரவியிருப்பதும் தெரிந்தது. உடனே அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர் இன்பரசன், அறுவை சிகிச்சை செய்தார். நோயாளியின் கண்ணை சுற்றியுள்ள எலும்பு, மூக்கின் வேர்பகுதி, மூளையின் அடிப்பகுதி எலும்புகள் அகற்றப்பட்டன. மூளையை சுற்றி ஏற்பட்டிருந்த நீர் கசிவு சரி செய்யப்பட்டது. எலும்பு அகற்றப்பட்ட இடத்தை மறு கட்டமைப்பு செய்ய, நோயாளி கையிலிருந்து தசை எடுக்கப்பட்டு, நுண்நோக்கி கருவிகள் மூலம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் தன்ராஜ் உதவியுடன் பொருத்தப்பட்டது. பின் மூக்கு பகுதியும் சீரமைக்கப்பட்டு, நோயாளி குணம் அடைந்தார்.
இதுகுறித்து தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தரணிஷ் கூறுகையில், ''அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர் இன்பரசன் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுகள். தரண் மருத்துவ
மனை புற்றுநோய் பிரிவு, அதிநவீன கருவிகள், தரமான மருத்துவ வசதிகளுடன் செயல்படுகிறது,'' என்றார்.

Advertisement