கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
மயிலம்: மயிலம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் இறந்தார்.
மயிலம், பட்டிகொட்டாத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மகன் சந்தோஷ் ராஜ், 30; மயிலத்தில்தனியார் அட்டை கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகாதவர்.
நேற்று காலை 7:00 மணிக்கு மயிலம் அடுத்த இளங்கம்பாடி கிராம எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் குளித்தார். அப்போது ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மயிலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நீண்ட நேரத்திற்குப் பிறகு 12:00 மணிக்கு சந்தோஷ்ராஜ் உடலை மீட்டனர்.
இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement