இடிந்த நுாலக சுவர் வாசகர்கள் சிரமம்
காரைக்குடி, ஜூலை 26-
கோவிலுாரில் நுாலக காம்பவுண்ட் சுவர் இடிந்து பல மாதங்களாகியும் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
காரைக்குடி அருகேயுள்ள கோவிலுார் அரசு உயர்நிலைப் பள்ளி நுழைவு வாயில் அருகே நுாலகம் செயல்பட்டு வருகிறது.நுாலக கட்டடம் 2021=- 22ம் ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இந்நிலையில் நுாலக சுற்றுச்சுவர் உடைந்து விழுந்து பல மாதங்களாகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. பள்ளி நுழைவு வாயிலில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இடிந்து கிடக்கும் காம்பவுண்ட் சுவர் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement