இ–வாடகை 2.0 செயலி அறிமுகம்
தேனி, ஜூலை 26–
மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கும் இ–வாடகை திட்டம் செயல்படுகிறது. இதில் பதிவு செய்துகொள்ள உழவர் செயலியில் இ–வாடகை 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு மற்றும் தனியாருக்கு சொந்தமான வேளாண் உபகரணங்களை வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தேனி கோட்டத்திற்கு 98655 44247 எண்ணையும், உத்தமபாளையம் கோட்டத்திற்கு 94438 69956 என்ற அலைபேசிகளில் அழைக்கலாம் என கலெக்டர் வைத்திநாதன் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement