தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களை மாற்றி வருகிறோம்: அமைச்சர் ராஜ்மோகன் ‘பளீச்’

புதுச்சேரி: அமலோற்பவம் லுார்து அகாடமி சார்பில் நடந்த மாணவர்களுக்கான கல்விச் சாதனையாளர் பாராட்டு விழாவில், தமிழக அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

​​மாணவர்கள், ​வாழ்க்கையில முடியும் நினைச்சிட்டா முடியாதது எதுவுமே கிடையாது. தன்னம்பிக்கை என்ற ஒன்று உங்ககிட்ட இருந்தா, நீ வாழ்க்கையில எப்படிப்பட்ட உயரத்துக்கும் போகலாம், ஜெயிக்க முடியும். கல்வி வந்துருச்சுன்னா உன் வாழ்க்கையே மாறிடும்.

தமிழ்நாட்டில் கல்வி பாடத்திட்டங்களை நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். யாரோ ஏதோ ஒன்று எழுதுறதை நாம படித்த காலம் போய், திட்டமிட்டு உருவாக்குறோம். அரசுப் பள்ளியில் படித்து, தமிழ்நாட்டில் பிறந்து, பாரத தேசத்திற்கே பெருமை சேர்த்த விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை என்னுடைய கரிகலம் கமிட்டி சேர்மேனாக கடந்த வாரம் நியமனம் செய்து, அவருக்கு முதல்வர் கையால் சான்று வாங்கிக் கொடுத்து தான் இங்கு வருகிறேன.

பாடங்களை எல்லாம் குறைத்து, வண்ணப் படங்கள், வரைபடங்கள் நிறைந்த புத்தகமா மாற்றுகிறோம்.

கணிதம் ஏன் இப்படி இருக்கு என வல்லுநர்கள் கூடி பேசி, கதைகளின் வழியே கணிதம். அந்த காலத்தில், கணிதம் பாடம் பெயர் கேட்டலே பயமா இருக்கும். இப்ப கதைகளின் வழியே கணிதத்தில் பெயர்களை எல்லாம் எப்படி மாத்திட்டு இருக்கேன் என்றால் ‘எனது பலுான்கள் எங்கே, உன்னிடம் எத்தனை பொம்மைகள் உள்ளன.

​ஜுராசிக் பார்க் மாதிரி இருந்த பாடத்திட்டம், இப்பதான் எனக்கு புடிச்ச மாதிரி மாறிட்டு இருக்கு. ஒரு குழந்தையைக் கூட விடக் கூடாது. அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய ஆட்டிசம் குழந்தைகள் கொஞ்சம் ஸ்பெஷல். நான் பேசும் போது அவங்க இப்படி அமர மாட்டாங்க, ஓடுவாங்க, சிரிப்பாங்க, அழுவாங்க, ஒரு கம்யூனிகேஷன் கஷ்டமா இருக்கும். அவங்க பெற்றோர் ரொம்ப கஷ்டப்படுவாங்க. அவங்கள வெளிய கூட்டிட்டு போக முடியாது.

​அதை உடைக்கணும்னு நினைச்சோம். ஒரு அதிகாரி நல்ல ஐடியா சொன்னாரு. பள்ளிக்கல்வித் துறையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து பேசினோம். உடனே, அரசுப் பள்ளி ஆட்டிசம் குழந்தைகளுக்கு மாதம் தோறும் உலக சினிமான்னு ஒரு சினிமா தியேட்டருக்கு நாங்களே கூட்டிட்டு போய், உலக சினிமாவை குழந்தைகளுக்கு காட்டி, கலை உணர்ச்சியை அந்த ஆட்டிசம் குழந்தைக்கு தந்தோம்.

​படம் முடிந்தவுடனே குழந்தைகள் எல்லாம் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன். அந்த குழந்தைகளோட பெற்றோர் கண்ணீர் விட்டு ஓடிவந்து கைப்பிடித்து அழுதாங்க. 

​முடியும் அப்படின்னு நினைங்க, உங்களால முடியும். ​இவ்வளவு நல்லது செஞ்சாலும் ஏதாவது விமர்சனம் வரத்தான் செய்யும். இந்த மேடையில் பரிசுகள் வாங்கப்போற அத்தனை குழந்தைகளுக்கும் பெரிய பாராட்டு; பரிசு பெறாத குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாராட்டு, இதைவிட பெரிய வெற்றிகள் எல்லாம் உங்களுக்காக காத்துட்டிருக்கு’ என்றார்.

Advertisement