வாய்க்கால் துார் வாரும் பணி ;எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஜீவிகா மிஷன் திட்டத்தின் கீழ், வாய்க்கால் துார் வாரும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி தவளக்குப்பம் இ.சி.ஆர்., அருகே செல்லும் வாய்க்காலை 6.46 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரி ஆழப்படுத்தும் பணியை, ராமு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement