ஷேர் மார்கெட்டில் நஷ்டம் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி: தேங்காய்திட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுராமன், 33; ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புன்னிய கீர்த்தனா. ஒரு மகன், மகள் உள்ளனர்.
ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுராமன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ரகுராமன், நேற்று காலை 7 மணிக்கு வீட்டின் வராண்டாவில் உள்ள பேனில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புன்னிய கீர்த்தனா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement