தடுப்புச்சுவரில் பைக் மோதி தீப்பிடித்ததில் இருவர் பலி
கோவை: சுங்கம் பகுதியை சேர்ந்த சியாம், 24 மற்றும் புலியகுளத்தை சேர்ந்த வசந்த்குமார், 27 ஆகிய இருவரும் நண்பர்கள். பெட்ரோல் பங்க் ஊழியர்கள். நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு பைக்கில் சென்றனர். புலியகுளம் பங்கஜா மில் சாலையில், முன்னால் சென்ற வேன் திடீரென்று நின்றது.
அதன் மீது மோதுவதை தவிர்க்க, சியாம் பிரேக் பிடித்துள்ளார். அச்சமயம் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் வாகனம் வேகமாக மோதி தீப்பிடித்தது. துாக்கி வீசப்பட்டதில் சியாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வசந்த்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement