காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்

திண்டிவனம்: டில்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடியை கண்டித்து, திண்டிவனத்தில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்தினர்.

டில்லியில் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்

இதனை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

திண்டிவனம் காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தியார் திடலில் முடிந்தது.

மாவட்ட பொருளாளர் சிவா தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஓ.பி.சி., அணி மணி, கோவிந்தன், நகர தலைவர் சத்தீஷ்குமார், வழக்கறிஞர் விஜயன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement