வீரசோழபுரம் கோவிலை புனரமைக்க ஹிந்து முன்னணி கோரிக்கை
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரம் கோவிலை புனரமைக்கக்கோரி ஹிந்து அறநிலையத்துறையை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மதன், மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, துணைத் தலைவர் ராமரஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி கோட்ட செயலாளர் முருகையன் பேசினர்.
கூட்டத்தில் வீரசோழபுரம் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை வீரசோழபுரம் கோவிலை புனரமைக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஹிந்து அறநிலையத்துறை மெத்தனமாக இருப்பதை கண்டித்து பேசினர்.
மேலும், சிதம்பரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சித்தலுார் பெரியாயி கோவிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்ககைகள் வலியுறுத்தப்பட்டன.
ஹிந்து முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். நகர துணை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.