தமிழக முதல்வர் அலுவலகம் இடம் மாறுகிறது; பணிகள் தொடக்கம்

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது தளத்திற்கு, முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், பழையமான கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் அமைந்துள்ளது. இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்கள், அந்த அறையில் அமர்ந்து தான் பணிகளை கவனித்தனர். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர்.

அதே வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட நாமக்கல் மாளிகையின், 10வது தளத்தில் கருத்தரங்க கூடம் உள்ளது. அங்கு முதல்வர் அலுவலகம் மற்றும் அவரது தனிச் செயலர்கள் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாளிகை 10வது தளத்தில், முதல்வர் அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும்.

Advertisement