வேப்பேரி போலீஸ்காரர் சுருண்டு விழுந்து இறப்பு

வேப்பேரி: வேப்பேரி காவல் நிலையத்தில், பணியில் இருந்த போலீஸ்காரர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெருமாள், 32; வேப்பேரி காவல் நிலைய போலீஸ்காரர். நேற்று முன்தினம் நள்ளிரவு பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது நண்பர் சேஷனும், பெருமாளும், காவல் நிலையம் வெளியே பேசிக் கொண்டிருந்தனர். பெருமாள், திடீரென மயங்கி, சுருண்டு விழுந்தார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர். பெருமாள் மனைவி செண்பகவள்ளி, ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Advertisement