ஆசிய யூத் ஹாக்கி: இந்தியா அபாரம்
மஸ்கட்: ஆசிய யூத் ஐவர் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி கோப்பை வென்றது. பைனலில் 3-1 என வெற்றி பெற்றது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஆசிய யூத் ஐவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. இந்திய அணிக்கு ரோமித் பால் (5வது நிமிடம்), கேப்டன் கேதன் குஷ்வாஹா (12), ஷாரூக் அலி (13) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பெண்களுக்கான பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்தியா சார்பில் நவ்ஷீன் நாஸ் (13வது நிமிடம்), புஷ்பா (20) தலா ஒரு கோல் அடித்தனர்.
பைனல் வரை சென்றதால் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள், யூத் உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. ஹாக்கி இந்தியா சார்பில், இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 2 லட்சம், இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது