பள்ளி கட்டடம் மீது சாயும் நிலையில் மரம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொ.மல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடத்தின் மேல் காய்ந்த பெரிய புளிய மரக்கிளை எந்நேரமும் கட்டடத்தின் மீது விழும் அபாய நிலையில் உள்ளது. இதை அகற்ற பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ள-வில்லை. இதனால் மாணவர்கள் தினமும் வகுப்பறையில் பயந்த படியே அமர்ந்து பாடம் படிக்கின்றனர்.
பள்ளியை சுற்றி, திறந்தவெளியில் கழிவுநீர் சாக்கடை உள்-ளதால், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் போது அதை தாண்டி வரும் நிலை உள்ளது. கழிவு கால்வாயால் சுகாதார சீர்-கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, காய்ந்த புளிய மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாயின் மேல்பகுதியில் மாணவர்கள் எளிதில் சென்று வரும் வகையில், சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.