உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதித்த முதியவரை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை
ஓசூர்: ஓசூர் காவேரி மருத்துவமனையில், 60 வயது மதிக்கத்தக்க முதி-யவர், கடுமையான தலைவலியால் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது, மூளையின் இடதுபுறத்தில் ரத்தம் உறைந்தி-ருப்பதுடன், மூளை திசுக்கள் இயல்பு நிலையை விட்டு விலகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்தது. இது-போன்ற நேரங்களில், தலையில் சிறிய துளையிட்டு ரத்தத்தை வெளியேற்றுவது வழக்கம். ஆனால், முதியவருக்கு அரிய ரத்த குறைபாடு இருந்ததால், அவரது உடலில் ரத்த தட்டணுக்கள் எண்-ணிக்கை, 20,000 என்ற அளவில் மட்டுமே இருந்தது.
இதனால் வழக்கமாக அறுவை சிகிச்சை செய்தால், மீண்டும், மீண்டும் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. அதனால், காவேரி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அதிநவீன சிகிச்சையை மேற்கொண்டனர். டாக்டர் அரவிந்தன் தலைமையிலான குழுவினர், முதியவரின் ரத்த தட்ட-ணுக்கள் எண்ணிக்கையை சீர் செய்து, 50,000மாக உயர்த்தினர்.அதன் பின், நோயாளி விழிப்புடன் இருக்கும் போதே, தொடை பகுதியில் சிறிய துளை வழியாக நுண் குழாயை மூளை வரை செலுத்தி, ரத்தக்கசிவை உண்டாக்கிய ரத்த நாளங்கள் அடைக்கப்-பட்டன. இதன் மூலம், முதியவர் பூரண குணமடைந்ததுடன், அவரது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை, 2.5 லட்சமாக உயர்ந்-தது.