தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் வரும் 27ல் காப்பீடு குறைதீர் முகாம்
தர்மபுரி: தர்மபுரி தலைமை அலுவலகத்தில் வரும், 27ல், காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களுக்கான குறை தீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்-பீடு வாடிக்கையாளர்களின் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், சிறப்பு குறை தீர் முகாம், தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் வரும் 27ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.
காப்பீடு, கிளைம் தொடர்பான குறைகள், பிரீமியம் செலுத்தும் விபரம், பாலிசி திருத்தம், புதுப்பிப்பு, ஆவணம் தொடர்பான சந்-தேகங்கள், குறைகள் தீர்க்கப்படும். எனவே காப்பீடு பாலிசி வைத்திருக்கும் அனைவரும், உரிய ஆவணங்களுடன், முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.