பல் மருத்துவ கண்காட்சி தொடக்கம்
சேலம்:இந்திய
பல் மருத்துவ சங்கம் தமிழக கிளை சார்பில், மாநில அளவில், 4ம் ஆண்டு பல்
மருத்துவ கண்காட்சி, சேலம், 5 ரோடு, ரத்னவேல் ஜெயக்குமார் திருமண
மண்டபத்தில் நேற்று தொடங்கியது.
சேலம் விநாயகா மிஷன்
சங்கராச்சாரியார் பல் மருத்துவ கல்லுாரி டீன் பேபி ஜான் தொடங்கி
வைத்தார். 110 அரங்குகளில், பல் மருத்துவ உபகரணங்கள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நடமாடும் வாகனம் நிறுத்தப்பட்டு,
இலவச பல் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுகுறித்து மாநில செயலர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில்,
''சர்வதேச
அளவில் நாளுக்கு நாள் பல் மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து
வருகிறது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து பல் மருத்துவர்கள், பல்
மருத்துவ மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க, மாநில அளவில் இக்கண்காட்சி
நடத்தப்படுகிறது. நாடு முழுதும் இருந்து, பல் மருத்துவ உபகரண
தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து, 'டெமோ'
காட்டுகின்றனர்,'' என்றார்.
மாநில
தலைவர் மகேஸ், வரும் ஆண்டுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்ட
சிவகுமார், பொருளாளர் ராஜ்குமார், மூத்த உறுப்பினர் ராஜ சிகாமணி,
திரளான பல் மருத்துவர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இன்றும்
கண்காட்சி நடக்கிறது.