வங்கிகள் தேசிய மயமாக்கல் தினம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட தினத்தையொட்டி, பைக் ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார்.

துணைத் தலைவர் முத்தையன், நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில், வங்கிகள் தேசியமயமாக்கலின் நன்மைகள் குறித்து நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement