அத்தியூரில் நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்
ரிஷிவந்தியம்: அத்தியூரில் 1,449 பயனாளிகளுக்கு 7.03 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு தலைமை தாங்கினார். கலெக்டர் பத் மஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், 'முதல்வர் விஜய் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தால் 2 நாட்களில் வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில், வருவாய்த்துறை சார்பில் 153 பயனாளிகளுக்கு 71.33 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஊரக, மகளிர் திட்ட நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு 3.17 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடனுதவி.
மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 19 பேருக்கு 2.41 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 957 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்.
சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 37 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 9 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடனுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 1,449 பயனாளிகளுக்கு 7.03 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்தையன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, தாசில்தார் நளினி, பி.டி.ஓ.,க்கள் அந்தோணியம்மாள், சவரி ராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்
-
இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
-
ஊமங்கலம், அம்பேத்கர் நகரில் மின்தடை
-
அடங்க மறுக்கும் குரங்கு: பிடிக்க துடிக்கும் வனத்துறை
-
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
-
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்