மோசடி வழக்கில் தண்டனை
மதுரை : திருச்சியில் செயல்பட்ட தனியார் நிறுவனம், ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியது. திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் நிறுவன உரிமையாளர் முகமது கலாம்ஜியை கைது செய்தனர். மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் முகமது கலாம்ஜிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் நிறுவன சொத்துக்களை ஏலத்தில் விட்டு தொகையை வசூலிக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement