மக்கள் குறைதீர் கூட்டத்தில் த.வெ.க., துண்டு விசிலுடன் நுழைந்த பாட்டியால் பரபரப்பு
சேலம்; சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்-போது, கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை, த,வெ.க., கட்சி துண்டு மற்றும் விசில் ஆகியவற்-றுடன், நெற்றி நிறைய விபூதி பட்டை, கை விரல்-களில் மோதிரங்கள் அணிந்த, 75 வயது பாட்டி ஒருவர், கையில் மனு இல்லாமல் அதிரடியாக நுழைந்து, 'அதிகாரிகளிடம் குடிசை மாற்று வாரிய வீடுகளை அதிக விலைக்கு விற்கி-றார்கள்.
ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து, கள்ளச்-சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்களா' என, மிரட்டல் தொனியில் கேள்வி கேட்டுள்ளார்.
'யார் நீங்கள்; உங்களுக்கு என்ன பிரச்னை' என, அதிகாரிகள் கேட்டதற்கு, 'நான் த.வெ.க., நிர்-வாகி. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஏழை-களுக்கு ஒரு பிரச்னை என்றால், நான் கேள்வி கேட்பேன்' என, கூறி விசில் அடித்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை வெளியே அழைத்து சென்றனர். அவர் நிருபர்-களை பார்த்து, 'அழகாபுரம் வாட்டர்போர்டு கால-னியை சேர்ந்த என் பெயர் ஜெயந்தி, அருள்வாக்கு கூறுவது என் வேலை. தமிழகத்தில் விஜய் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதிகா-ரிகள் வேலை செய்யவில்லை என்றால், நான் வந்து கேட்பேன்' என கூறியபடி சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.