பெயின்டர் மீது போக்சோ

மேட்டூர்; மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டர் மீது, போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர்.


மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி வெள்ளப்பம்பட்-டியை சேர்ந்த மாணவி பிளஸ் 2 படிக்கிறார். அந்த ஊரில், 6 மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் பண்டிகை நடந்தது. அருகிலுள்ள தெத்-திகிரிபட்டியை சேர்ந்த மாணவியின் உறவினர் பெயின்டர் மணிகண்டன், 21, பண்டிகைக்கு சென்-றுள்ளார். அப்போது மாணவியுடன் பழக்கம் ஏற்-பட்டுள்ளது. அதை மாணவியின் பெற்றோர் கண்-டித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மே, 27ல் மாணவி பள்ளிக்கு செல்லாமல் மணிகண்டனுடன் மல்லிகுந்தம் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்ற மணிகண்டன், பாலியல் தொல்லை
செய்துள்ளார்.
அதன் பின்பு திருமணத்தை மறைத்து, மாணவி தனது வீட்டில் இருந்துள்ளார். தகவல் அறிந்த சேலம் குழந்தைகள் நல அலுவலர் சாந்தா, மாணவியிடம் விசாரித்துள்ளார். மாணவி நேற்று மாலை, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பானுமதி, மணிகண்டன் மீது போக்சோவில் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Advertisement