மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்; முதல்வர் விஜய் கடிதம்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடகாவுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. அந்த பதிலை திரும்பப் பெற வேண்டும்.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடகாவுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது. காவிரியில் பாசனம் பெறும் பிற மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கடைமடை மாநில அனுமதி இல்லாமல் மேலே உள்ள மாநிலங்கள் அணை கட்ட முடியாது. காவிரி மன்ற இறுதித்தீர்ப்பு 2018 சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு படி கர்நாடகா அணை கட்ட முடியாது.
கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்தை ஒப்புலின்றி செயல்படுத்த முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் பார்லியில் தந்த தவறான பதிலை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். கூட்டாட்சித் தத்துவம், நீதிமன்ற தீர்ப்புகளை காக்க பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஸ்டாலின்தான் எப்போதும் கடிதம் எழுதுவார் ..... ஒரு மாற்றம் வேண்டி நீங்கள் ஏன் கடிதத்திற்கு பதில் வேறு ஏதும் முயற்சி செய்யலாமே நீங்கள் தானே கூறினீர்கள் ஸ்டாலின் எப்போதும் கடிதம் எழுதி நேரத்தை வீணடிக்கிறார் என்று நீங்கள் ஏதாவது மாற்றம் கொண்டுவரலாமே