முதல்வருடன் ‘போசியா’ சந்திப்பு
கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) முதல்வர் விஜயை, சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
சங்க ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
குறுந்தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின்சார நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், 20 ஆண்டுகளுக்கு முந்தைய வாட் கணக்குகள் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும், 18 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு உள்ள தொழில் முனைவோர்க்கு பவர் பேக்டில் இருந்து விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வைத்தோம்.
‘முதலில் எந்த பிரச்னைக்கு தீர்வு வேண்டும்’ என்று முதல்வர் கேட்டார். நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, ஜேம்ஸ் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement