நீர் மின் நிலையங்களில் உற்பத்தி இல்லை: கை கொடுக்கும் காற்றாலை, சோலார் மின்சாரம்
கம்பம்:தேனி மாவட்டத்தில் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி இல்லாததால் சோலார், காற்றாலை மின் உற்பத்தி கை கொடுத்து வருவதால் மின்வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோடை காலமான மார்ச் முதல் ஏப்ரல் வரை நீர் மின் நிலையங்கள் உற்பத்தி இருக்காது. ஜூனில் தென்மேற்கு பருவ மழை பெய்து, மீண்டும் மின் உற்பத்தி துவங்கும். இந்தாண்டு மார்ச் முதல் ஜூலை வரை மழை இல்லை. நீர் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நீர்மின் நிலையங்கள்: தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையம் 168 மெகாவாட் , சுருளியாறு மின் நிலையம் 35 மெகாவாட், முல்லைப்பெரியாற்றில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குறுவனூத்து பாலம் வரை 4 மைக்ரோ மின் நிலையங்கள் 12 மெகாவாட் , வைகை அணை மைக்ரோ மின் நிலையம் உள்ளன. இவற்றில் தற்போது பெரியாறு நிலையத்தில் மட்டும் 23 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுருளியாறு மின் நிலையத்தில் தேவைக்கேற்ப 10 அல்லது 15 மெகாவாட் உற்பத்தியாகிறது. முல்லைப் பெரியாற்றில் மைக்ரோ மின் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன. குள்ளப்பகவுண்டன்பட்டி மின் நிலையம் வெள்ளத்தால் சேதமடைந்து சீரமைப்பு பணிநடக்கிறது. கடந்த மார்ச் முதல் 5 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்களிலும் உற்பத்தி இல்லை. ஆனால் சோலார் மற்றும் காற்றாழை மின் உற்பத்தி கை கொடுகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் , ' இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், ஜூலை வரை மின் உற்பத்தி பின்னடைவை சந்தித்தது. அதே சமயம் சோலார் பகல் - நேர தேவையை பூர்த்தி செய்கிறது. இரவில் 10 மணிக்கு பின் சுருளியாறு மின் நிலையத்தை நள்ளிரவிலும் உற்பத்தியை துவக்கி சமாளித்து வருகிறோம். தற்போது காற்றாழை மின் உற்பத்தியும் கிடைப்பதால், தேவையை எளிதாக சமாளித்து வருகிறோம்,' என்றனர்.
மேலும்
-
சிறையில் கணவர்; விபத்தில் மனைவி பலி குழந்தை தவிப்பால் நிவாரணம் கேட்டு மறியல்
-
31 பேர் அரசு பணி ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
இரவில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
-
செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க 2வது மாநாடு
-
மண் எடுக்க மறுப்பு விவசாயிகள் அதிருப்தி