எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்க முடியாது; சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 'ஆன்லைன் வர்த்தக மோசடி விவகாரங்கள் தவிர, பிற வழக்குகளில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், வங்கி கணக்கை முடக்கும்படி, போலீசார் வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மருத்துவ தம்பதியினர், தனியார் பைனான்சியர்கள் கார்த்திகா கனகராஜ், மகாராஜா ஆகியோரிடம் இருந்து, 3.94 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
திடீரென அதிக வட்டி கேட்டு, அவர்கள் மிரட்டியதால், மருத்துவ தம்பதியினர், கோவை மாநகர கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிக வட்டி கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்தவர்களின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டனர். எனவே, வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி, கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மருத்துவ தம்பதியினர், மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆன்லைன் வர்த்தக மோசடி விவகாரங்களை தவிர, பிற வழக்குகளில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல், வங்கி கணக்கை முடக்கும்படி, போலீசார், வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது.
அதே நேரத்தில், பைனான்சியர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் வைத்து, மனுதாரர்கள் வங்கி கணக்கை உடனே இயக்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
மாரந்தை வரத்து கால்வாய் சீரமைப்பு
-
நாட்டரசன்கோட்டையில் ஆடி முளைக்கொட்டு விழா முளைப்பாரி ஊர்வலம்
-
சிங்கம்புணரியில் அங்கன்வாடி கட்டடம் கேட்டு முற்றுகை
-
தெக்கூரில் முளைப்பாரி விழா
-
பரமக்குடி-- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து அபாயம்: எச்சரிக்கை போர்டுகள், தடுப்புகள் அமைக்க வேண்டும்
-
டாஸ்மாக் மதுக்கடைகளில் 50 சதவீதம் தனியார்மயம்?