நாட்டரசன்கோட்டையில் ஆடி முளைக்கொட்டு விழா முளைப்பாரி ஊர்வலம்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து தெப்பக்குளத்தில் கரைத்தனர்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 21 அன்று ஆடி முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி விதை பரப்பினர்.தினமும் மாலை கண்ணுடைய நாயகி பல்லக்கில் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு பல்லக்கில் தங்க முளைப்பாரி அலங்காரத்தில் கண்ணுடைய நாயகி எழுந்தருளினார். பெண்கள் முளைப்பாரியை தலையில் ஏந்தியவாறு ஊர்வலமாக தேரோடும் வீதிகளில் சென்றனர். கோயில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் முளைப்பாரியை கரைத்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் தைலக்காப்பு அலங்காரத்தில் வீதி உலா வருகிறார்.

Advertisement