தெக்கூரில் முளைப்பாரி விழா

மானாமதுரை: தெக்கூரில் உலகுடைய அம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முளைக்கொட்டு திண்ணையில் பாரம்பரிய முறைப்படி கும்மி பாட்டு பாடினர்.மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை முளைப்பாரியை சுமந்து சென்று கைலாசநாதர்-கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோயில்களில் வைத்து வழிபாடு செய்தனர். முளைப்பாரிகளை உப்பாற்றில் சென்று கரைத்தனர்.

Advertisement