மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி விவசாயிகளுக்கு வெளிவளாக பயிற்சி

விருத்தாசலம்: கீரப்பாளையம் அடுத்த சிறுகாலுார் கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது.

பயிற்சிக்கு, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

மேலும் விதை நேர்த்தி, உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்பாடுகள், சமச்சீர் உரமேலாண்மை, களை மேலாண்மை, நுண்ணுாட்டச்சத்து பயன்பாடு, நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை குறித்து விளக்கினார்.

அதன்பின் தமிழ்நாடு வேளாண் பல்கலை., இணையதள செயலிகள் குறித்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement