லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

நேற்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வீடு கட்டுமானத்திற்காக கல் ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. லாரியை மதுரை மேலுார் வெங்கடேசன் 55, ஓட்டி வந்தார். இவர் மண்டபம் காந்தி நகரில் சென்ற போது திடீரென ரோட்டின் குறுக்கே நாய் கடந்தது.

அப்போது திடீர் பிரேக் அடித்ததால் லாரி எதிர்பாராமல் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் வெங்கடேசன் உயிரிழந்தார். மண்டபம் போலீஸ் எஸ்.ஐ., முத்து முனியசாமி விசாரிக்கிறார்.

Advertisement