காதல் ஜோடி தஞ்சம்: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர் சரவணன், 45. இவர், கர்நாடக மாநிலம், பானஸ்வாடி பகுதியில் குடும்பத்தின-ருடன் தங்கி, மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மோகன்ராஜ், 21, பி.இ., பட்டதாரி. பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தன்னுடன் கல்லுாரியில் படித்த ஸ்ரீசா, 19, என்ற பெண்ணை காதலித்து வந்-துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்தனர்.


நேற்று முன்தினம், ஸ்ரீசாவை, அவரின் வீட்டிற்கு தெரியாமல் மோகன்ராஜ் அழைத்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகிலுள்ள் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, திருமண கோலத்தில், நேற்று அதியமான்கோட்டை போலீசில் சரணடைந்தனர்.தகவலறிந்த இரு தரப்பின் உறவினர்களும், அங்கு முற்றுகையிட்-டனர். பெண்ணை கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் படி, கர்நா-டக போலீசாரும், அங்கு வந்தனர். இதையடுத்து, அதியமான் கோட்டை போலீசார், சம்பந்தப்பட்ட காதல் ஜோடியின் உறவி-னர்கள், கர்நாடக போலீசாரை மட்டும் அனுமதித்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீசா, 'தன் விருப்பப்படியே, காதலன் மோகன்ரா-ஜூடன் வந்துள்ளேன். நான் மேஜர். என் விருப்பப்படி, அவ-ருடன் திருமணம் முடித்துள்ளேன்' என கூறியதையடுத்து, கர்நா-டக போலீசார் மற்றும் பெண்ணின் பெற்றோரை திருப்பி அனுப்-பிய போலீசார், ஸ்ரீசாவை, அவரது கணவர் மோகன்ராஜூடன் அனுப்பி வைத்தனர்.
பாலக்கோட்டில்
பென்னாகரம் அடுத்த ஏரியூர் பூதிநத்தத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் விஜயலட்சுமி, 19. பாப்பாரப்பட்டியி-லுள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ, 2ம் ஆண்டு படிக்-கிறார். இவர் பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளியை சபரி, 23, என்பவரை காதலித்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பால், நேற்று இரு-வரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, திருமண கோலத்தில் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம-டைந்தனர். இருவரின் பெற்றோரை அழைத்து, சமாதானம் செய்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement